technology

img

'விவோ டி1 5ஜி'  ஸ்மார்ட்போன் அறிமுகம் 

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமானது. 

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் விவோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’டி1 5ஜி’ ஸ்மார்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக ’விவோ ஒய் 33 டி' இந்தியாவில் அறிமுகமான நிலையில் தற்போது ’டி’ வரிசையின் முதல் ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஆன்டுராய்ட் 11 வெர்சன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்  6.67 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை, 778 குவால்கம் ஸ்னாப் டிராகன், 4,6,8 ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், 50 எம்பி முதன்மை கேமராவுடன் 8 எம்பி கூடுதல் லென்ஸ், 16 எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் அளவு கொண்ட பாட்டரி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.  

மூன்று வகையாக வெளியாகும் இந்த டி1 வரிசை ஸ்மார்ட்போன்களில்  4ஜிபி+128ஜிபி - ரூ.15,990, 6ஜிபி+128 ஜிபி - ரூ.16,990 , 8ஜிபி+128 ஜிபி- ரூ.19,990 என விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

;